ஹொரனை பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் 34 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மாஸ் ஹோல்டிங் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
நேற்று இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 30ஆம் திகதியன்று 30 பணியாளர்கள் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
இந் நிலையில் பணியாளர்கள் அனைவருக்கும் பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பின்னரே ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.