ஹோமாகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் தாய் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிசார் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அச் சூழலில் வீட்டில் தனிமையில் இருந்த 25 வயது மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளமை அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 வயது மாற்றுத்திறனாளியான மகனொருவனுடன் வாழ்ந்துவந்த தாயொருவர் தனக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுகின்றது என வைத்திய துறையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்குவிரைந்த வைத்தியத்துறையினர் தாயை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் தனிமையிலிருந்து மனமுடைந்த மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வைத்திய அதிகாரிகள் அங்கு விரைந்தபோது அயலவர்கள் மேற்படி குடும்பத்தின் நிலைமையை தெளிவுறுத்தி தாயை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்வதாயின் மகனையும் கூடவே கொண்டுசெல்லுமாறு வலியுறுத்தியிருந்தும் அவர்கள் தாயை மாத்திரம் அழைத்துச் சென்றதாக பிரசே மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அவர்கள் குறித்த மரணத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் பொறுப்பெறுக்கவேண்டும் என வேண்டுகின்றனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது சுகாதார உத்தியோகித்தர் தாயை தனிமைப்படுத்திய பின்னர் காலியிலுள்ள அவர்களின் உறவினர்களை அழைந்து மாற்றுத்திறனாளியை கவனித்துக்கொள்ளுமாறு தெரியப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.