இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 169 பேருக்கும், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 35பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் இதுவரை 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,060 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 6,134தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,905 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 405 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.