கம்பஹா – ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கம்பஹா – ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தனது வீட்டிலேயே உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் கம்பஹா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.