போலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருவில் ஏற்படும் குறைபாடுகளைக் காரணமாக கூறி கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது என அந்நாட்டின் அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து குறித்த தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த 9 நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தலைநகர் வார்ஷாவில் நேற்று நடந்த பேரணியில் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.