இலங்கையில் நேற்று இரவு 21வது கொரோனா மரணம் பதிவாகியது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த மரணம் 22 கொரோனா மரணம் என கூறுவதற்கு சிலர் முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கம்பஹா நகர முதல்வர் எரங்க சேனாநாயக்கவின் பேஸ்புக் பதிவும், அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் உள்ள விடயங்களில் காணப்பட்ட வித்தியாசங்களே இந்த குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.
இது வீட்டில் நிகழ்ந்த மரணமாக கம்பஹா நகர முதல்வர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். எனினும் இது வைத்தியசாலையில் ஏற்பட்ட மரணம் என அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் மரணம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்திற்கமைய இது 22 ஆவது மரணம் என சிலர் கூற முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கம்பஹா நகர முதல்வரிடம் வினவிய போது இந்த இரண்டு மரணங்களும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.