வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட் 19 தாக்கம் மற்றும் தற்போதைய நிலமை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களுடன் வேலை செய்த மற்றும் தொடர்புகளை பேணியவர்கள், பிற மாவட்டங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் சென்று வந்த இடங்களுக்கு சென்று வந்தோர் என 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.