டெல்லி அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்ள் மோதின. இதில், நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து அந்தணிக்கு ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் பெங்களூரு அணியின் எண்ணிக்கை மந்தமாகவே இருந்தது.
ஜோஷ் பிலிப் 12 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி 29 ஓட்டங்களில் ஏமாற்றம் அடைந்தார். அப்போது பெங்களூரு அணி 12.3 ஓவரில் 82 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து 50 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியாக பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் குவித்தது,
153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்றா இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக தவான் மற்றும் ப்ரித்திவ் ஷா களமிறங்கினர்.
இதில் ப்ரித்திவ் ஷா 9 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த ரஹானேவுடன் சேர்ந்து தவான் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.
இதனால் தவான் அரைசதம் அடித்து 54 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து ரஹானேவும் 60 ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஏற்கனவே முதல் ஆளாக மும்பை அணி நிற்பதால், நாளை நடைபெறும் ஹைதராபாத் மற்றும் கொலத்தா அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெறும் அணி, நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.