டெல்லி அணிக்கெதிரான போட்டியில், கோஹ்லி அடித்த பந்தை ஸ்டைனிஸ் அற்புதமாக கேட்ச் பிடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றது. பெங்களு அணி தோல்வியடைந்தாலும், இரு அணிகளும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், போட்டியின் 13-வது ஓவரை அஸ்வின் வீசினார்.
அப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி, சிக்ஸர் அடிக்க முற்பட, ஆனால் பந்தானது நேராக பீலட்ரான மார்க் ஸ்டைனிசிடம் செல்ல, அவர் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.