டெல்லி அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது எப்படி என்பது குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின, இதில் இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடின.
இதில் வெற்றிபெறும் அணி புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறும். ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடையும் அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
That's that from Match 55.@DelhiCapitals win by 6 wickets and book the No.2 spot in #Dream11IPL 2020 Points Table. pic.twitter.com/QGkcH0TNtF
— IndianPremierLeague (@IPL) November 2, 2020
அதன் படி பரபரப்பான இப்போட்டியில் டெல்லி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு அணி தோல்வியடைந்தது. அதோடு பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது எப்படி என்று பார்த்தால்?
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
இதில், 16.5 ஓவரை தாண்டி தோல்வியடைந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் 17.4 ஓவர் வரை தாக்குப்பிடித்து தோல்வியடைந்தாலும் பிளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை பெங்களூருவுக்கு இருந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் பெங்களூரு அணி, டெல்லியை 17.4 ஓவருக்குள் வெற்றி பெற விடாததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பிளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
வெற்றி பெற்ற டெல்ல கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
We have the three qualifiers for #Dream11IPL 2020.
Who will take the vacant spot? pic.twitter.com/6PkxK6nzsa
— IndianPremierLeague (@IPL) November 2, 2020