உருளைக்கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க வல்லது என்பதை அனைவரும் புரிந்திருப்பீர்கள்.
உடலுக்கு மட்டுமல்ல, சருமம் மற்றும் கூந்தலுக்கும் கூட உருளைக்கிழங்கு மிகப் பெரிய அளவில் உதவக்கூடியது.
பல கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமெனில், தொடர்ந்து உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தி வந்தாலே போதும்.
உருளைக்கிழங்கின் சாறு அத்தனை வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திடும்.
உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
ஒரு கப் உருளைக்கிழங்கு சாற்றின் மூலம், உடலில் இழந்த வைட்டமின் சி சத்தை உடனே ஈடு செய்திடலாம்.
வைட்டமின் சி சத்தானது, உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று. அதனால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயனளிக்கிறது.
உருளைக்கிழங்கு சாறு எப்படி செய்வது?
- முதலில் 2 அல்லது 3 உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
- தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- வேண்டுமென்றால், உருளைக்கிழங்கை அரைக்காமல், துருவியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இப்போது, அரைத்த உருளைக்கிழங்கு அல்லது துருவிய உருளைக்கிழங்கை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.
- இப்போது அந்த துணியில் உள்ள உருளைக்கிழங்கை பிழிந்து சாறு எடுக்கவும்.
- பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தவும்.
செய்முறை
- பாதி கப் அளவிற்கு உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
- அத்துடன், 1 முதல் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- தயார் செய்ய கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தேய்க்கவும்.
- அரை மணிநேரம் அப்படிய ஊற விடவும்.
- பின்னர், மிதமான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசிடவும்.
முக்கிய குறிப்பு
உருளைக்கிழங்கு சாறு தயாரித்தவுடன் உடனே பயன்படுத்திட வேண்டும்.
நீண்ட நேரத்திற்கு வைத்திருந்து உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தவே கூடாது.
சாறு எடுப்பதற்கான உருளைக்கிழங்கை நன்கு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிற உருளைக்கிழங்கு, அடர் நிற உருளைக்கிழங்கு, முளைக்கட்டிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தவே கூடாது.
விருப்பப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றை குடிக்கவும் செய்யலாம். இதன்மூலம், உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.