மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 3 திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீஸார் வலைவீசி தேடிக் கண்டு பிடித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் வருமானம் இழந்து வாழ்க்கையை நகர்த்த சிரமப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் கணவரும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அதனால் அவர் பணத்திற்காக, கடந்த 3 மாதங்களில் 3 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர்.
திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் அந்த ஆண்களின் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்பி செல்வது தான் அவரது வழக்கம். இதேபோல் 3 ஆண்களை ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 3 ஆண்களில் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.