எவ்வளவு செலவழித்தாலும் இன்றைக்கு மார்க்கெட்டுகளில் கிடைக்கின்ற தலைமுடி பராமரிப்புப் பொருள்கள் முழுக்க நமக்குப் பிரச்சினையை அதிகப்படுத்துகிறதே தவிர குறைப்பதில்லை.
அவ்வளவு ஏன் முழுக்க முழுக்க ஆயுர்வேத புராடக்ட் என்று சொல்லி விற்கப்படுகிறவற்றில் கூட கெமிக்கல் கலப்பு இருக்கத்தான் செய்கிறது.
தலைமுடி பராமரிப்பை பொருத்தவரையில் முடியை எவ்வளவு பராமரிக்கிறாமோ அதைவிடவும் அதனுடைய வேர்க்கால்களுக்குத் தான் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
- தலைமுடியின் வேர்க்கால்களைப் பராமரிப்பது மிகமிக அவசியம்.
- தலையில் அரிப்பு ஏற்படும் பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த தலை அரிப்பதற்குக் காரணம் தலையின் வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்கள் தான்.
- இதனாலேயே உங்களுடைய தலைமுடி பார்ப்பதற்கு ஆரோக்கியமற்றதாகவும் பொலிவில்லாமலும் இருக்கின்றன.
- அதனால் நீங்கள் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிக்கிற பொழுது, தலையின் வேர்க்கால்களை சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
எப்படி வேர்க்கால்களைப் பராமரிப்பது, சுத்தம் செய்வது? வேர்க்கால்களில் உள்ள இறந்த செல்களை எப்படி வெளியேற்றுவது? இதோ பாருங்கள். அதற்கும் மிக எளிய வழிகள் உண்டு.
ஹேர் ஸ்கிரப்
- பொதுவாகவே ஷாம்புவில் சிறிது சர்க்கரை சேர்த்தவுடன் அது நாம் முகத்தில் அப்ளை செய்யும் ஸ்கிரப்பைப் போன்று கொரகொரப்பாக மாறிவிடும்.
- சிறிது நேரம் நன்கு ஸ்கிரப் செய்துவிட்டு தலைமுடியை அலசுங்கள். தலையில் உள்ள இறந்த செல்கள் யாவும் உதிர்ந்துவிடும்.
- இவ்வளவு எளிமையாக வீட்டிலே உள்ள பொருள்களை வைத்தே மிக எளிமையாக தலைமுடியை பராமரிக்க முடியும் என்கின்ற பொழுது, இதற்கான ஏன் சிரமப்பட்டு விலையுயர்ந்த ஷாம்பு, ஹேர் ஸ்கிரப் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.




















