குரு பெயர்ச்சியின் காரணமாக சற்று மோசமான பலன்களைப் பெற உள்ள ராசிகள் யார்.
அவர்கள் எப்படிப்பட்ட வழிபாடு, பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்,..
நிகழும் சார்வரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ஐப்பசி 30ம் தேதி (நவம்பர் 15) அன்று குரு பகவான் தனுசு ராசியின் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு ஞாயிற்றுக் கிழமை இரவு 9.50 மணிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5ம் தேதி (நவம்பர் 20) அன்று அதாவது வெள்ளிக்கிழமை பகல் 1. 23 மணிக்கு பெயர்ச்சி ஆவார் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குரு பெயர்ச்சி ஏன் இவ்வளவு விசேஷம்?
நவகிரகங்களில் இயற்கை முழு சுபராக இருப்பவர் குரு பகவான். இவர் பொது சுபராக இருக்கும் பட்சத்தில் அவர் நின்ற வீட்டை விட அவரின் பார்வை பலனால் அதிக பலனைத் தரக்கூடியவர். அந்த வகையில் அவர் நின்ற வீட்டின் காரகங்களையும், அவர் ஏற்ற ஆதிபத்தியத்திற்கும் ஏற்ப சுபமான அல்லது அசுப பலன்களைக் கொடுக்கக்கூடியவர்.
அவர் எப்போது சுப பலன்களைத் தரக்கூடியவர் என்றாலும், அவரின் ஆதிபத்தியத்தின் காரணமாக சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் தரக்கூடியவர்.
கவனமக இருக்க வேண்டிய ராசிகள்
- மிதுனம்
- சிம்மம்
- விருச்சிகம்
- கும்பம்
- மீனம்
மேலே கூறப்பட்டுள்ள ராசிகள் குரு பகவானுக்கு உரிய கோயிலுக்கு சென்று வணங்கி வருதலும், குருவுக்கு உகந்த பரிகாரங்கள், பூஜை, ஹோமங்களில் பங்கேற்பது நல்லது.
ஆசிரியரான குருவின் அருளைப் பெற கல்வி பயில பொருளாதார வசதியற்றவர்களுக்குக் கல்வி உதவி அளிப்பதால் அல்லது உங்களால் முடிந்தால் அவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பதும் மிக சிறந்த பலனைத் தரக்கூடும்.
ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவருக்கு நடக்கும் திசாபுத்திக்கு ஏற்றவாறு குரு மிக அதிக நன்மையை அளிப்பதும், குறைந்த தீங்கான பலனை அளிக்கக்கூடியவர்.