இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவி, கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தை ரெய்னா வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காகவும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடும் வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார்.
இவர் மனைவி பிரியங்கா கர்வா சௌத் என்ற பண்டிகையை நேற்று கொண்டாடினார்.
கர்வா சௌத் என்பது திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை இப்பெண்கள் உண்ணாதிருந்து, தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.
இதை கொண்டாடிய பிரியங்கா, ரெய்னா கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
இது தொடர்பான புகைப்படத்தை சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த நல்ல நாள் நமக்கு நித்திய ஒற்றுமையைக் கொண்டுவரட்டும், மேலும் நம்முடைய அன்பின் பிணைப்பை இன்னும் பலப்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/ImRaina/status/1324016380220497923