நாட்டில் இரு வாரங்களில் 11 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் கொரோனா வைரஸினால் ஏற்படும் மரணங்களுக்கு மத்தியில் இலங்கை மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளரான மருத்துவர் ஹர்த்த அலுத்கே இன்று நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
மிகவும் குறுகிய காலத்தில் 11 மரணங்கள் பதிவாகியிருக்கின்றமை பாரதூரமான விடயம் எனவும் அவர் சுட்டியுள்ளார்.
மேலும் நாட்டிற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டு 9 மாதங்களில் 13 மரணங்களே பதிவாகியிருந்தன என்றும், ஆனால் இரண்டே வாரங்களில் 11 மரணங்கள் தற்போதுவரை பதிவாகியிருப்பதாகவும் கூறிய அவர், இதில் பலர் வீட்டிற்குள்தான் மரணித்திருப்பது கவலைக்குரிய ஒன்றெனவும் தெரிவித்தார்.