பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சம்யுக்தா கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுவதைப் பார்க்க முடிந்தது.
அவரின் நான்கு வயது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் இருந்தபடியே அவர் பேசும் வீடியோவை பிக்பாஸ் வெளியிட, அதனை பார்த்த சக போட்டியாளர்கள் அவரை ஆறுதல் படுத்தினர்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் பிக்பாஸ் அவரை வீட்டின் தலைவர் என்ற முறையில் கூப்பிட்டு போட்டியாளர்கள் ஆங்கிலத்தல் பேச கூடாது என்று கூறி கண்டிக்கிறார்.
இந்த சீசனில் பலரும் அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தி வந்தனர்.
ஆங்கிலம் தெரியாத பலரும் இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.