பாடகர் செந்தில் குமரனின் மறு உருவாக்க பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடந்த 2016-ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலை செந்தில் தொடங்கினார்.
அதில் ரம்மி படத்தில் பல மக்களில் உள்ளங்களை கொள்ளை கொண்ட ‘கூடைமேல கூடை வைச்சி…’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டார்.
இந்த பாடலை தொடர்ந்து இவர் பாடிய பல பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அவரின் யூடியூப் பக்கத்தில் “ தேன்நிலவு என்ற படத்தில் இடம்பெற்ற பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.