யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தூக்கி தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி மாணவியே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
குறித்த தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்ட மாணவி அதனை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மேற்படி மாணவி மூச்சுவிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் பாடசாலையிலும் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த மாணவி தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாக தாயாரிடம் கூறிய தாயார் வைத்தியசாலை செல்வோம் என கூறியுள்ளார்.
எனினும் தயார் இல்லாத நேரம் தூக்கில் தொங்கிய நிலையில், உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவியின் இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



















