குருமா மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் அன்னாசி பூவும் இடம்பெற்று இருக்கும். இதனை ஸ்டார் அனீஸ் (Star Anise) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதனை பெரும்பாலானோர் உணவுகளின் மனத்திற்காக சேர்ப்பதாகவே எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், நமது பாரம்பரிய உணவுகளில் அன்னாசி பூவிற்கும் தனியொரு இடம் உள்ளது.
அஞ்சறை பெட்டியில் இருக்கும் கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் மஞ்சள் போன்ற பல பொருட்களுடன் அன்னாசி பூவும் இருக்கும். அன்னாசிப்பூவில் பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளது. அன்னாசிப்பூவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் மூலமாக உடலுக்கு நலம் கிடைக்கிறது.
அன்னாசி பூ பெரும்பாலும் இந்திய மற்றும் சீன சமையல் முறைகளில் ஜீரணத்திற்காகவும், உணவு வாசனையாகவும் சேர்க்கப்படுகிறது. குறைந்தளவு கலோரிகள் அன்னாசிப்பூவில் இருப்பதால், உடல் பருமன் கொண்டவர்கள் உணவுடன் சேர்த்து கொள்ளலாம். தினம் தோறும் இதனை உணவுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிறது. இரத்த செல்களின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகிறது.
அன்னாசிப்பூவில் இருந்து தயார் செய்யப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி வறட்சி, சரும நோய்கள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கிறது. இந்த எண்ணெயில் இருக்கும் ஒனித்தோல் (Onithol) என்ற மூலக்கூறு தசைப்பிடிப்பு பிரச்சனைகளை சரி செய்கிறது. முகப்பரு பிரச்சனைக்கு தீர்வாகவும் அமைகிறது.
பெண்களின் கூந்தலை பராமரிக்கவும், அஜீரண கோளாறுகள், இதய பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு மற்றும் சளி தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பிரச்சனையையும் சரி செய்கிறது. வாயு தொல்லை, படபடப்பு, வலிப்பு மற்றும் மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.
அன்னாசிப்பூவை பெண்கள் உணவில் எடுத்துக்கொண்டு சாப்பிட்டு வருவதால் மாதவிடாய்க்கு காரணமாக இருக்கும் ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பிற்கு உதவி செய்கிறது. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் உதவி செய்கிறது. மாதவிடாய் நேர வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்கு அன்னாசிப்பூ பொடியை இளம் சூடுள்ள நீரில் கலந்து குடிக்கலாம். அன்னாசிப்பூ பொடியை பாலில் தேனுடன் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.