இயற்கையில் உள்ள பல நன்மைகள் நமது உடலுக்கு பல்வேறு நன்மையை செய்து வருகிறது. அந்த வகையில், ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக்குறைவு, நரம்புத்தளர்ச்சி, குழந்தையின்மை, வீரிய குறைபாடு, ஆணுறுப்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் சரியாகி இயற்கை மூலிகை பவுடர் செய்வது குறித்து நாம் காணலாம்.
இந்த மூலிகையின் மூலமாக ஆண்மை குறைவு, ஆண்குறி விறைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி, ஆண் மலட்டு தன்மை, குழந்தையின்மை, தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க, உயிர் அணு குறைபாடு, அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல், கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல், வீரியம் இல்லமை, நரம்பு பலப்படும், ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது நீங்கிவிடும் என்ற பல நன்மைகள் இருக்கிறது. இந்த இயற்கை மருந்தை தயார் செய்து 90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர பல நன்மைகள் கிடைக்கும்.
தேவையான மூல பொருட்கள்:
ஜாதிக்காய் – 5 முழு காய்,
அமலாக்கி (நெல்லி வற்றல்) – 10 எண்ணிக்கை,
நீர்பிராமி – 15கிராம்,
காய்ந்த வெற்றிலை – முழுதாக 5,
பிப்பலி – பெரிய மிளகு,
நீர்முள்ளி – 15 கிராம்,
முசிலி – 15 கிராம்,
சங்கு விதை (பூனைக்காலி விதை) – 50கிராம்,
அஸ்வகந்தா – 30கிராம்,
சிலாசத்து (இளம்கருப்பு நிறம்) – 5 அல்லது 15 கிராம்,
கொக்கிரு (அக்கிலு) -15 கிராம்,
முருங்கை விதை,
பால்முதுங்கன் – 15 கிராம்,
ஓரிதழ் தாமரை – 50கிராம்,
தண்ணீர் விட்டான் கிழங்கு – 2 சிறு முழு கிழங்கு,
நிலப்பனை கிழங்கு – 25 கிராம்,
சர்க்கரை பூசணி விதை – 50 கிராம் அல்லது 50 விதைகள்,
அத்திப்பழ உலர் விதை – 50 கிராம்,
பிஸ்தா பருப்பு – 50 கிராம்,
பாதாம் பிசின் – 15 கிராம்,
உலர் மதன காம பூ – 30 கிராம்,
கருவேலம் பிசின் – 20 கிராம்,
கோரை கிழங்கு – 2 சிறிய கிழங்கு,
ஏலக்காய் விதைகள் – 20 ஏலக்காய் விதைகள் மட்டும்.
செய்முறை:
மேலே தெரிவித்துள்ள மூலிகைகளை பவுடராக வாங்காமல் மூல பொருளாக வாங்கிக்கொள்ளவும். பின்னர் மூல பொருளில் மேல் தோலை நீக்கிவிட்டு வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதனை அறிந்து பொடியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மூல பொருட்களில் உள்ள சில பொருட்கள் மூல பொருளாக கிடைக்காத பட்சத்தில், பவுடராக உபயோகம் செய்து கொள்ளலாம்.
இம்மூலிகையை தயார் செய்த பின்னர் 200 மில்லி அளவு வெதுவெதுப்பான பால் அல்லது நீரில் 1 கரண்டி என 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் மேற்கூறிய பலன்கள் கிடைக்கும். சுவைக்காக தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: இந்த மூலிகையை சாப்பிடும் போது காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 250 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்தியிருக்க வேண்டும். உடலுக்கு சூடு தரும் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது. தினமும் கட்டாயம் 8 மணிநேரம் உறங்க வேண்டும். உளர் அத்தி, மாதுளை, செவ்வாழை, உளர் பேரிசை, திராட்சை போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். சிறிய அளவிலான உடற்பயிற்சிகள், குக்கரில் சமைக்காத சாதம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக இந்த மூலிகையை சாப்பிடும் போது குறைந்தது முதல் 21 நாட்களுக்கு தாம்பத்தியம், கைப்பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை கட்டாயம் மேற்கொள்ள கூடாது.