தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளின் கீழ் நுகர்வோருக்கு அவர்களின் நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம் வழங்கப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே நீர் வழங்கல் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் மக்களால் நீர்க்கட்டணங்களை வழக்கம் போல் செலுத்த முடியாது.
எனவே அப்பகுதிகளிலிருக்கும் மக்களுக்கு நீர்க்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மால் முடிந்த ஒரு நாளில் அதனை செலுத்தலாம்.
ஏனையவர்கள் வழக்கம் போல தமது நீர்க்கட்டணங்களை செலுத்தலாம். மேலும் கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் மட்டுமே செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.