தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
தனை தொடர்ந்து இவர் தாம் தூம், அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது ராய்லட்சுமி தன்னுடைய அப்பா இப்படி இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தன்னை ஸ்ட்ராங்கான மனிதராக உருவாக்கியவர்.
அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாதது. மிஸ் யூ அப்பா என தெரிவித்து தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ராய் லட்சுமியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி அவரின் அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/iamlakshmirai/status/1324972010896838656



















