கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசின் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதில் தரம் 9ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் இறுதிவரை அமுலில் இருக்கும்.
இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதிமுதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் வேலைவாய்ப்பின்றி உள்ள ஏராளமான ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாடசாலைகள் ஆகியவற்றை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















