அமெரிக்க நகரமான Virginia Beach என்ற இடத்திலுள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், 12 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் நால்வரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்து நான்கு மணி நேரத்திற்குப் பின் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த பொலிசார், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.