மேல் மாகாண பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், தொடர்ந்தும் 250 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் 317 மேல் மாகாண பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1,447 பொலிஸ் அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.