அமெரிக்க தேர்தலில் தெளிவான முடிவு எட்டப்படும் வரையில், அமெரிக்க தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
Ottawaவில் செய்தியாளர்கள் மாநாடு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நிய நாடுகளின் இடையூறு இல்லாமல் தேர்தல் நடைமுறைகளை செயல்படுத்துவது அவசியம் என்றார்.
பொதுவாக தேர்தல் நடவடிக்கைகளில் எதிர்ப்பாளர்கள்தான் இடையூறு செய்வதாக நாம் நினைக்கிறோம், ஆனால், நண்பர்களின் தாக்கம் கூட தேர்தலுக்கு இடைஞ்சலாக அமைந்துவிடக்கூடும்.
ஆகவேதான், நாம் அமெரிக்க தேர்தலில் தெளிவான முடிவு வெளியாகும் வரையில் அமைதியாக இருக்கப்போகிறோம் என்றார் அவர்.
பல நூற்றாண்டுகளாக தங்கள் தேர்தல் நடைமுறைகளை செவ்வனே செய்துவரும் அமெரிக்க தேர்தல் அமைப்பில் நாம் தொடர்ந்து நம்பிக்கை வைப்போம். அதே நேரத்தில் கனேடியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்துகொள்வதிலும் கவனமாக இருப்போம் என்றார் ட்ரூடோ.