கத்தார் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட துறைநீலாவணை நபரின் உடல் நேற்று முன் தினம் கத்தார் டுக்கான் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு துறைநீலாவணையில் இருந்து தொழில் நிமிர்த்தம் காரணமாக கத்தார் நாட்டிற்கு சென்றிருந்த நடராஜா திவிதரன் எனும் இளைஞர் சென்ற மாதம் 18 திகதி அங்கு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் குறித்த நபரின் உடலை தாய் நாட்டுக்கு எடுத்து வரமுடியாத அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.