அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை என்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கிறது” என்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் உலகத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகளைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கமலா ஹாரிஸுக்கு தமிழில் ஒரு வாழ்த்துக் கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் #KamalaHarris தமிழ்நாட்டின் மன்னார்குடி – துளசேந்திரபுரத்தை தாய்வழி பூர்வீகமாகக் கொண்டவர்!@KamalaHarris அவர்களின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருக்கிறேன்! pic.twitter.com/mP7ZHfcQ3Y
— M.K.Stalin (@mkstalin) November 9, 2020