இலங்கை சனத்தொகையில் 20 வீதமானோருக்கு கொவிட் – 19 தடுப்பு மருந்தினை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.