யாழ்ப்பாணம் காரைநகர் பலகாட்டினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று பிரான்ஸில் திடீரென உயிரிழந்துள்ளார்.
(வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பிரான்ஸ், பரிஸில் சக நண்பர்களுடன் அறை ஒன்றில் குடியிருந்த குறித்த இளைஞன் நித்திரையில் இருந்தபோதே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொணடு வருவதுடன், அவருடன் தங்கியிருந்த இளைஞர்களையும் விசாரணை செய்து வருகின்றனர்.
குறித்த இளைஞன் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், உயிரிழப்புக்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதே வேளை பிரான்ஸில் இரண்டு கிழமைக்குள் மூன்று ஈழத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.