கொரோனா அச்சத்தை அடுத்து கண்டி கலகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புரேகம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அதன்படி கும்புரேகம, தீப்பலாகொட, ஏத்தமுல்ல ஆகிய பிரதேசங்களே முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தில் 5 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.