யாழ்.மிருசுவில் – கரம்பகம் பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த விடுதி ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இரு பெண்கள் உட்படமூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய வீடொன்றில் மிக இரகசியமாக இயங்கிவந்த குறித்த விடுதி தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு விடுதியை முற்றுகையிட்டுள்ளது.
இதேவேளை பொலிஸாரின் முற்றுகையிலிருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.