அமெரிக்காவின் விருப்பங்கள் இலங்கை மீது திணிக்கப்படாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா டிப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதோ அல்லது வேறு நாடுகளின் மீதோ அமெரிக்காவின் விருப்பங்கள் திணிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் செய்த போது இந்த விடயம் தெளிவானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நட்பு நாடு என்ற வகையில் நாட்டில் பேண்தகு அபிவிருத்தி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முதலீடுகள் பிராந்திய வலயத்தில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குமே தவிர, கடன் சுமையை அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாத்பைன்டர் அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் இணைய வழியாக பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.