இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வீட்டுக்கு கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
சத்திஷ்கரை சேர்ந்தவர் அனுசியா (35). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அனுசியாவின் கணவர் மர்மமான முறையில் கடந்தாண்டு உயிரிழந்தார். இந்த நிலையில் ஹித்தேஷ் என்ற தன்னை விட 10 வயது குறைவான நபருடன் அனுசியாவுக்கு காதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த சூழலில் வீட்டு கழிப்பறையில் அனுசியா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள்.
அப்போது ஹித்தேஷ் கூறுகையில், மதியம் 3 மணிக்கு கழிப்பறைக்கு என் மனைவி சென்றார், வெகுநேரமாகயும் அவர் வெளியில் வரவில்லை.
பின்னர் நான் உள்ளே சென்று பார்த்த போது காயத்துடன் தரையில் விழுந்து கிடந்தார்.
தூக்கில் தொங்கிய போது கயிறு அவிழ்ந்ததால் கீழே விழுந்து சடலமாக கிடந்தார் என கூறியுள்ளார்.
ஆனால் அவர் மீதே பொலிசாருக்கு சந்தேகம் வலுத்துள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை முடிவில் அனுசியாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.