கொழும்பு நகரில் நேற்றையதினம் மாத்திரம் 2850 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ரூவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணிக்கை போன்ற நான்கு மடங்கான கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட 400 PCR பரிசோதனைகளில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததன் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால் 5 வீதமாகும். அதனை 6 இலட்சம் மக்களுக்கு மதிப்பிட்டு பார்த்தால் 30000 பேர் கொரோனா தொற்றுடன் நடமாட கூடும்.
அந்த 30000 பேருக்குள் வைரஸ் உள்ள போதிலும், அவர்கள் அதனை பரப்புவதாக கூறு முடியாது.
எப்படியிருப்பினும் இது ஆபத்தான நிலைமை என்பதனை நாங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.