அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார்.
திடீரென நோய் வாய்ப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு உயிரிழந்த இளைஞர் 28 வயதுடைய சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த கைதி என குறிப்பிடப்படுகின்றது.
முறைக்கேடு தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் கூறியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அங்குனுகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


















