பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா இறந்துவிட்டார் என்று ராயல் அரண்மனை ட்விட்டரில் அறிவித்துள்ளது.
84 வயதான ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவில் உள்ள மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பஹ்ரைன் செய்தி நிறுவனமான பி.என்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், அவர் எதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பதை குறிப்பிடவில்லை.
பிரதமர் உடல் நாட்டிற்கு வந்தவுடன் பஹ்ரைனில் இறுதிச்சடங்கு நடைபெறும், மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறவினர்கள் மட்டுமே இறுதிச்சடங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்என் என்று பி.என்.ஏ தெரிவித்துள்ளது.
ஒரு வார கால துக்கம் மற்றும் அனைத்து அரசாங்க வேலைகளையும் வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்க பஹ்ரைனின் மன்னர் உத்தரவிட்டார் என்று பி.என்.ஏ தெரிவித்துள்ளது.