நீண்டகாலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விரட்டியடித்து அம்பாறை மாவட்டத்தில் எங்களது தனித்துவத்தினை நிலைநாட்டிள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதமரின் விசேட இணைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை எல்லைக்கிராமமாக வேப்பையடியில் பிரதமரின் விசேட இணைப்பாளரின் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் நீண்டகாலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விரட்டியடித்து நாங்கள் தனித்துவத்தினை இந்த அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கியுள்ளோம்.
அம்பாறை மாவட்டத்தில் நான் செய்த செயற்பாடே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆட்டங்காணச் செய்துள்ளது.
எனது செயற்பாடுகள் காரணமாகவே வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரிவினை சந்தித்தது. அவர்கள் அதனை உணர்ந்துகொண்டு எதிர்காலத்தில் செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


















