கொழும்பு நகர எல்லைக்குள் 30,000 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டொக்டர் ஜயருவன் பண்டார இது தொடர்பாக தெரிவிக்கையில்,
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
கொரோனாவின் அறிகுறிகள் தென்படுமாயின் சிகிச்சை பெற தயங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோருவதாக டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான பொது மக்களின் மனப்பான்மையும் மாற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


















