கல்கிஸ்சை பிரதேசத்தின் காலி பிரதான வீதியின் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து ஒருவரது சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்கிஸ்சை தர்மபாலராம பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அந்த நபரின் மரணம் தொடர்பாக கல்கிஸ்சை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் இப்படியான மரண சம்பங்கள் நடந்துள்ளன. இந்த மரணங்களுக்கான சரியான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.
கொரோனா வைரஸ் பரவி வருவது மற்றும் இந்த வைரஸ் காரணமாக தொடர்ந்தும் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி வீதிகளில் நிகழும் மரணங்கள் தொடர்பில் சாதாரண மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.