கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு பயன்படுத்தும் தடுப்பூசி இலங்கைக்கு கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 3 வருடங்களாகும் என லங்கா சமசமாஜா கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.
வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட சமூககத்தில் 80 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்படும் இந்த தடுப்பூசி இலங்கையிலுள்ள 20 வீதமானோருக்கு மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அது மாற்று நடவடிக்கை அல்ல.
நாட்டில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு மக்களில் நூற்றுக்கு 80 வீதமானோருக்கு அந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அந்த நிலைமையை இலங்கையில் ஏற்படுத்துவது சந்தேகம் தான்.
அதற்காக 3 வருடங்களேனும் காத்திருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இந்த தடுப்பூசிக்காக காத்திருப்பதனால் நாம் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றும் நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.