கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவான மரணங்கள் கொழும்பில் பதிவாகி உள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்து ஒன்றரை மாதங்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 25 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாகும்.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 40 – 50 வயதுடையவர்களாகும். அந்த வயதுடைய 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவதாக 50 – 60 வயதுடையவர்களே அதிகமாக உயிரிழந்தவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 9 ஆகும். 2 நாட்களில் 5 பேர் என்ற கணக்கில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 21 பேர் ஆண்கள் எனவும் ஏனையவர்கள் பெண்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமான முதலாவது அலையில் 13 பேர் உயிரிந்துள்ளனர். ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகிய இரண்டாவது அலையில் 39 பேர் உயிரிழந்துள்ளளனர். அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.