அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது.
அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



















