ரசிகர்கள் அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து கூறி நடிகை லாஷ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் நடிகை லாஷ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் முக்கோண காதலில் சிக்கி பலவேறு சர்ச்சைகளை சந்தித்தார்.
ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருந்த ஆதரவை அடுத்து பிக்போட்டியின் இறுதிவரை சென்றார் லாஷ்லியா.
தற்போது இருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்துவருகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் நடிக்கும் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் லாஷ்லியா.
சினிமாவில் பிசியாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூற, அழகான பாவடை தாவணியில், தேவதையையாய் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
View this post on Instagram



















