தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
மகாஜனக் கல்லூரியில் இருந்து 36 பேர் சித்திபெற்றிருந்தனர். வயாவிளான் சிறீவேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர். இதை அந்த வித்தியாலயத்தின் அதிபரான யூட் மரியரட்ணம் உறுதிப்படுத்தினார்.
நேற்று நள்ளிரவு வெளியான தகவல்களின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ஜெயந்தன் 196 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார்.