மினுவன்கொட கொவிட்-19 கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவன்கொட கொத்தணியில் சுமார் 3106 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இதில் 136 பேர் மட்டுமே தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு இன்று அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி ஆரம்பமான கொவிட் இரண்டாம் கொத்தணியின் மினுவன்கொட கொத்தணியை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் இனி வரும் காலங்களில் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர் இரண்டாம் அலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெஹலியகொட கொத்தணியைச் சேர்ந்த தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக அவர்களில் பலர் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.