திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிந்து வருகின்றன.
இம்மாவட்டத்தின் கோணேஸ்வரா கோயிலை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மான் கூட்டங்களுக்கு தங்குமிடங்கள் மற்றும் உணவுகள் இன்றியும் வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் அலைந்து திரிகின்றன.
அதேபோன்று உணவுக்காக திருகோணமலை சிறைச்சாலையை அண்டிய பகுதியில் மான் கூட்டங்கள் பொலித்தின் உறைகள் மற்றும் கழிவுகளையும் உண்டு வருகின்றன.
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியிலே அதிகளவான மான்கள் காணப்படுகின்றன,மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள் மற்றும் உணவுகள் இன்மையால் வீதியை கடக்க முற்படுகின்ற போதும் அதேபோன்று பொலித்தின் பைகளை உண்ணுகின்ற மான்களும் வருடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா காரணமாக மான்கள் உணவுக்கு அழைந்து திரிவதை காணக்கூடியதாகவுள்ளது.திருகோணமலை நகர சபையினால் மான்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.