பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் திறப்பது குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கடந்த 9ஆம் திகதி அரச பாடசாலை மாணவர்களின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவிருந்தன.
எனினும், நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளுக்கு அமைய எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் தற்போதுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காகக் கல்விமான்கள், மருத்துவத்துறையினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்” – என்றார்.