தண்ணீர் நம் உடலுக்கு அடிப்படை தேவையான ஒன்றாகும்.நாம் உடல்நலத்தை பேணிக்காப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர் நம் உடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நம் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது அவசியமாகும். அதுவும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் என்ன நன்மை என்று பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் ஏனோ தானோவென்று தினமும் கடமை போன்று பின்பற்றுவார்கள்.
இப்படி ஒரு செயலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியாமலேயே பின்பற்றினால், அதன் மூலம் கிடைக்கும் நன்மைக்கு ஒரு அர்த்தமே இருக்காது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சரும அழகு கூட
ஒரு கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சருமத்திற்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதால் மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். அழகு கூடும்.
செரிமானப் பிரச்னை தீர
காலை எழுந்ததும் வயிறு செய்யும் முதல் செரிமானம் தண்ணீராக இருந்தால் அன்றைய நாள் முழுவதும் உங்கள் செரிமானம் சீராக இருக்கும். செரிமானப் பிரச்னையே வராது.
சிறுநீரகம் வலுப்பெற
காலை எழுந்ததும் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீராக இருந்தாலும் அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்ற தூண்டும். நச்சுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்திற்கு போதுமான தண்ணீர் காலையிலேயே கிடைத்தால் அதன் வேலையை சிறப்பாக செய்துவிடும்.
ரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேற
காலையில் எழுந்ததுதாம் தண்ணீர் அருந்துவதால் நமது உடலில் உள்ள கழிவுகளும் நமது ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.
உடல்எடை குறைக்க
தூங்கி எழுந்ததும் 60 நொடிகளில் நீர் குடித்து வருவதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.
நீர் மண்டலத்தை வலுவடையச் செய்ய
காலையில் நீர் அதிகமாக குடிப்பதால், நமது உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நிணநீர் மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.
உடல் நச்சு வெளியேற
தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.
எடையை குறைக்க
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.‘
பசி அதிகரிக்க
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். நன்றாக பசி எடுக்கும். அதனால் காலை உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட தோன்றும். ஜீரணம் வேகமாக நடைபெறும் உடலில் தேவைல்லாத கொழுப்புகள் சேராது. தினமும் இந்த பழக்கத்தை கடைபிடித்தால் உடல் நலன் மேம்படும்.